\
 “8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தமாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி 

 “8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தமாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி 

 “8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தமாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி 
Published on

8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “யாருக்கும் நெருக்கடி தந்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த மாட்டோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல. 8 வழிச்சாலையை நிறைவேற்ற வேண்டும் என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். 

8 வழிச்சாலைக்காக நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பலர் மனு அளித்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற நிலை அரசுக்கு கிடையாது. நவீன முறைப்படி அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணைக்கு போதிய காவிரி நீர் வந்தவுடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சொட்டு நீராக இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com