எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; முதலமைச்சர் பங்கேற்பு

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; முதலமைச்சர் பங்கேற்பு

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; முதலமைச்சர் பங்கேற்பு
Published on

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வ‌ர் கோயில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். 

 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வ‌ர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைப்பெற்றது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இந்தக் கோயில் நீண்ட காலத்துக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு இன்று குடமுழுக்குவிழா நடைபெற்றது. அதற்காக அதிகாலை முதல் யாக பூஜைகள் செய்யப்பட்டன. 

விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எடப்பாடி, கொங்கணாபுரம், ராக்கிப்பட்டி, சிலுவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்‌. 70 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com