"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்

"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்

"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
Published on

முதல் பேட்ஸ்மேனாக களம் இறங்கி, ஆட்டமிழக்காமல் 234 ரன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என நாகை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

நாகையில் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது...


"திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். மக்கள் இனி அதை நம்ப போவதில்லை. அதிமுகவினர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கிறார்கள். இன்னும் எஞ்சி இருக்கிற 40 நாட்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இறங்குகிற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக களத்திலிருந்து 234 ரன்களை அடித்த பெருமையை பெற்றவராக திகழ்வார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி வழங்கும் எடப்பாடி பழனிசாமியை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரும் அமோகமாக வெற்றி பெறுவார்கள்" என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com