ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்துவைத்தார் முதல்வர்

ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்துவைத்தார் முதல்வர்
ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்துவைத்தார் முதல்வர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி வெண்கல முழு உருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.

இச்சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை முதலமைச்சர் ட்ரோன் மூலம் அகற்றி திறந்தார். அதோடு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் ட்ரோனை பயன்படுத்தி ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது.

மேலும், லேடி வெலிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com