பாசனத்திற்காக பவானிசாகர் அணை 14-ம் தேதி முதல் திறப்பு- முதல்வர் உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணை 14-ம் தேதி முதல் திறப்பு- முதல்வர் உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணை 14-ம் தேதி முதல் திறப்பு- முதல்வர் உத்தரவு!
Published on

நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com