உலகத் தரத்திலான உயர் சிகிச்சை: முதலமைச்சர் பழனிசாமி உறுதி

உலகத் தரத்திலான உயர் சிகிச்சை: முதலமைச்சர் பழனிசாமி உறுதி

உலகத் தரத்திலான உயர் சிகிச்சை: முதலமைச்சர் பழனிசாமி உறுதி
Published on

சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உலகத் தரத்திலான உயர் சிகிச்சை அளிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட அனைவரையும் பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் கவனித்து வருவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மைக்கு புறம்பானாது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலகத் தரத்திலான உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்

முன்னதாக, கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, யாரும் எதிர்ப்பாராத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, கடை முன் குவிந்தவர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com