அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று கொரோனா நிவாரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

அதன்படி ரூ. 3,250 கோடிக்கான நிவாரணங்களை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அப்போது “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். நடைபாதை வியாரிபாரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ. 1000 மற்றும் கூடுதலாக ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும். கட்டட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 1000 வழங்கப்படும்.

ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 நிவாரண நிதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com