\
'ஸ்காட்லாந்து யார்ட்'-க்கு இணையான காவல்துறை: முதல்வர் பழனிசாமி பாராட்டு

'ஸ்காட்லாந்து யார்ட்'-க்கு இணையான காவல்துறை: முதல்வர் பழனிசாமி பாராட்டு

'ஸ்காட்லாந்து யார்ட்'-க்கு இணையான காவல்துறை: முதல்வர் பழனிசாமி பாராட்டு
Published on

'ஸ்காட்லாந்து யார்ட்' காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புபணிகள் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 15,621 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தீவிரவாத செயல்கள் தலைதூக்காத வண்ணம் தமிழக காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் காவல்துறையில் பணியாற்ற திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காவலர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் உள்ள மாநிலம் என்ற சிறப்பை பெற்றது தமிழகம் என்றும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் நேர்மையும் நடுநிலைமையும் தவறாமல் சீருடை பணிக்கு தேர்வானவர்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com