அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு, ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தைக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், சில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியை விமர்சிக்கும் வகையில் பேசியதால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதன் காரணமாகவே, ஊடகங்களில் தற்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தெரிகிறது.