நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் கார் பருவ சாகுபடிக்கு வரும் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
554 புள்ளி 25 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதனால், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2ஆயிரத்து 756 புள்ளி 62 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.