\
நாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

நாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

நாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு
Published on

கஜா புயல் நிவாரணப் பணிகள் வழங்க நாகை சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் திருவறும்பூர் மலைக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பு நாகராஜ் பணிக்காக திருவாரூர் வந்துள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அமைச்சர்கள் காமராஜ், சரோஜா உள்ளிட்டோர் நாகராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். 

இந்நிலையில், உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com