தமிழ்நாடு
புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! : தேசிய நூலக தினம் குறித்து முதல்வர் ட்வீட்
புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! : தேசிய நூலக தினம் குறித்து முதல்வர் ட்வீட்
'பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் முத்தமிழறிஞர் வழியில்தான்' எனக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதனின் பிறந்த நாளான இன்று, இந்தியா முழுவதும் தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தையொட்டி தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''தேசிய நூலக நாள் இன்று! புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்! பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் அவர்வழியில்தான். வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்'' என்று அவர் குரிப்பிட்டுள்ளார்.