முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி? “ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்” - முதலமைச்சர் பதில்!

“மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது” என அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பார்வையிட்டார். பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

'மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீண்டும் மீண்டுமா? புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!! ரூ.7000-த்தை தொட்டது கிராம்..

வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்பது குறித்து பதிலளித்த முதலமைச்சர், “அவர்களுடைய வெள்ளை அறிக்கை எந்த அளவிற்கு இருந்தது என்பது தெரியும். அமைச்சர் ராஜா ஏற்கனவே தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com