cm stalins old carpt desk
தமிழ்நாடு
பசுமையான நினைவுகளோடு பழைய காரை ஓட்டிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீண்ட காலத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பழைய காரை பசுமை நிறைந்த நினைவுகளோடு ஓட்டிச் சென்றார்.
அடையாறில் உள்ள பூங்காவில் முதலமைச்சர் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால் நேற்று முதலமைச்சர் புறப்படும்போது, தனது பழைய காரில் பயணிக்க விரும்பினார்.
இதையடுத்து வாகனத்தை அவரே ஓட்டிச் செல்ல, முதலமைச்சருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பயணித்தார். பழைய நினைவுகளை சுமந்தபடி, மாநகரின் சாலையில் முதலமைச்சர் பயணிக்க, இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.