தமிழ்நாடு
'நம்மைக் காக்கும் 48' - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'நம்மைக் காக்கும் 48' - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாலை விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு அவசர உயிர்காக்கும் இலவச சிகிச்சை அளிப்பதற்கான 'நம்மை காக்கும் 48' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூரில் இன்று தொடங்கி வைத்தார்.
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், 'நம்மை காக்கும் 48' சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதற்காக 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.