கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படம் முன் கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படம் முன் கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படம் முன் கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Published on

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி நடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியபோது கண்கலங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.   

மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து முதல்வராக பதவியேற்றதும் கோபாலபுரம் புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது நெகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.  பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com