டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வானிலை மைய அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன், வருவாய் பேரிடர் துறை மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக இதுபோன்ற புயல் பேரிடரை தமிழகம் சந்திக்கிறது. ஆலோசனைக் கூட்டத்தில் மக்களை எவ்வாறு காப்பது, பள்ளத்தாக்குகள் நிற்பவர்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது, எங்கெல்லாம் முகாம்கள் அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முதலமைச்சருடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.