தமிழ்நாடு
சென்னை: சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பருவகாலம் என்பதால் பல்வேறு இடங்களில் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில்,மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 200 வார்டுகளிலும் மருந்து, மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மழைக்கால நோய்களை தடுக்க சிறப்பு முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.