வ.உ.சி. பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வ.உ.சி. பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வ.உ.சி. பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கப்பல் சார்ந்த துறையில் சிறந்து விளங்கும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ''கோவை வ.உ.சி.பூங்காவில் வ.உ.சிதம்பரனார் முழு உருவ சிலை அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் வ.உ.சி. பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும். வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி. பெயர் வைக்கப்படும் வ.உ.சி. எழுதிய புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வ.உ.சி. நினைவு நாளான நவம்பர் 18-ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும். கப்பல் சார்ந்த துறையில் சிறந்து விளங்கும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்'' உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com