மீனவர்களுக்கான 10 முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் - கச்சத்தீவு குறித்து ஆவேச பேச்சு

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழகம் முழுவது போராட்டம் நடத்தியது திமுக அரசு.
முதல்வர்
முதல்வர்PT

இராமநாதபுரம் மண்டபம் பகுதியில் நடைப்பெற்ற மீனவ நல மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, மீனவ மக்களுக்கு 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

”கடல் மீன் குஞ்சு பொறிப்பகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பல நூற்றாண்டாக வகைவகையான கடல்களில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள். திமுக ஆட்சியில் மீனவர்களுக்கான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

NGMPC139

இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான மீனவர்கள் தாக்கப்படுவதும் பல லட்சம் மதிப்பிலான படகுகள் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை 5ஆயித்திலிருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

காணமல் போன மீனவர்களுக்கு தினசரி வழங்கப்படும் நிதி உதவியாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் 250யில் இருந்து 350யாக உயர்த்தப்பட்டுள்ளது.

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை கால நிவாரண தொகை 5ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவாய் பெறும் அளவில் கடல் பாசி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

NGMPC139

தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள்

மீனவர் நலன் - 10 முக்கிய அறிவிப்புகள்

1) மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5,000லிருந்து ரூ.8,000ஆக உயர்வு

2) மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு வீடுகளுக்கான பட்டா

3) 45,000 பேருக்கு மீன்பிடித் தொழிலுக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன்

4) தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்பு

5) காணாமல்போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250லிருந்து ரூ.350ஆக உயர்வு

6) மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்புச்சுவர்கள்

7) மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் வருவாய் பெற பல்நோக்கு கடல் பாசி பூங்கா

8) மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

9) 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்

10) விசைப்படகுகளுக்கான மானிய விலை டீசல்

முதல்வர் கட்சத்தீவைப்பற்றி பேசிய பொழுது,

கச்சத்தீவு ஒப்பந்தத்தை திமுக அரசு ஏற்கவில்லை. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் எனவும் ராமநாதபுரம் அரசருக்கு சொந்தம் என அனைத்து ஆதரங்களையும் இணைத்து முதல்வர் கருணாநிதி கொடுத்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழகம் முழுவது போராட்டம் நடத்தியது திமுக அரசு. கச்சத்தீவை மீட்பதற்கு பல முறை மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்று முதல்வர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com