\
எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரை, முதல்வரை சந்தித்தார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எழுவர் விடுதலை தொடர்பான வழக்கின் கெடு முடியவுள்ள சூழலில் ஆளுநரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். கிண்டி ராஜ்பவனின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தபிறகு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ நல்ல முடிவை எடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை வைத்தார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்

அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர், ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com