சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் - முதல்வர்

சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் - முதல்வர்
சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் - முதல்வர்

சிறு குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனாவை தடுக்கவும் நோயினால் ஏற்படும் தாக்கத்தை தடுக்கவும் 4 மாதங்களாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நோயினால் ஏற்படும் இறப்பு மிக குறைவாக உள்ளது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதாரத்தில் மீட்டெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டது.

மாநில அளவிலான வங்கிகள் குழு கூட்டத்தில் கலந்துக்கொள்வது எனது கடமை. அரசின் நடவடிக்கைகளுக்கு வங்கிகள் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நன்றி, பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் தான். வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு தேவை. வங்கிகள் சிறப்பு முகாம் மூலம் உழவர் கடன் அட்டை வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com