
சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஆளுநர் - முதல்மைச்சர் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.