தமிழ்நாடு
ரிசர்வ் வங்கி தமிழகத்தை குறைத்து மதிப்பிடுகிறது : பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ரிசர்வ் வங்கி தமிழகத்தை குறைத்து மதிப்பிடுகிறது : பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஏற்கெனவே அதிக கடன் பெற்றிருந்தாலும் உரிய நேரத்தில் திருப்பி செலுத்திய மாநிலத்தை ரிசர்வ் வங்கி குறைத்து மதிப்பிடுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில ஷரத்துகள் பாரபட்சமாக உள்ளது. எனவே ரிசர்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.