ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் அறிமுகம்

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் அறிமுகம்

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் அறிமுகம்
Published on

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக்கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முககவசங்கள் வழங்கப்பட உள்ளன. அந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் இன்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

காட்டன் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள முகக்கவசம் தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com