முதல்வரின் காப்பீடு திட்ட வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு - தமிழக அரசு
முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.