முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுpt web

“இன்னும் 30% பணிகள் எஞ்சியுள்ளன; விரைவில் நிறைவடையும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சென்னையில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சென்னையில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்த அவர் மழை நீர் வடிகால் பணிகள் 25 - 30% எஞ்சியிருப்பதாகவும் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “3 மாத காலமாக மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். திருப்புகழ் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்த அதற்கான பணிகளில் இறங்கிவிட்டோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
“கடல் அமைதியாகும்வரை என்ன வேணாலும் நடக்கலாம்” - குமரியில் கடல் சீற்றம்... சென்னைக்கு வந்த அழைப்பு!

மழை நீர் வடிகால் பணிகள் இன்னும் 25% முதல் 30% வரை எஞ்சியுள்ளன. விரைவில் அந்த பணிகளும் நிறைவடையும். சென்னை மாநகர மக்களுக்கும், புறநகர் மக்களுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். தூய்மைப் பணியாளர்கள் , பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் இந்த பணிகளில் முழு மூச்சில் ஈடுபட்டு தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளார்கள்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com