தமிழ்நாடு
மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ஆம் தேதி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ஆம் தேதி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை
சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கொரனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 29-ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
வருகின்ற 31ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் முதல்வர்.