தமிழ்நாடு
அன்புடனும் சகோதரத்துவத்துடனும்... - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி
அன்புடனும் சகோதரத்துவத்துடனும்... - பக்ரீத் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி
இஸ்லாமிய பெருமக்களுக்கு மனமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் இந்நன்னாளில் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள். திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அன்புடனும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.