தமிழ்நாடு
இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். அப்போது கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களில் மூன்றாவது முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் சந்திக்கிறார்.