பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
Published on

சர்க்கரை இருப்பு வைக்கும் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டுமென பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சர்க்கரை இருப்பு வைத்திருக்கும் அளவு 2.17 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், கூடுதல் கையிருப்பு வைத்திருப்பது என்பது தமிழகத்தில் தடுமாற்றத்தில் இருக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு எந்த வகையிலும் பலன்தராது எனக்கூறியுள்ளார். மேலும், உள்நாட்டு சந்தையில் சர்க்கரைக்கான குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 29 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

இது, தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு பயன்தராமல் போகலாம். 2013 -14ம் ஆண்டு முதல், தமிழக அரசு பரிந்துரைத்த விலையில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1,510 கோடி ரூபாய் நிலுவை வைத்திருக்கின்றன. எனவே, சர்க்கரை இருப்பு அதிகரிப்பது என்பது விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த அளவே கரும்பு கிடைக்கும் நிலையில், எத்தனால் தயாரிப்புக்கான உதவி வழங்கும் திட்டமும், தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக எவ்வித பலனும் அளிக்காது. தமிழகத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படும் நிலையில், மாநில உற்பத்தி 5.8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. எனவே, இருப்பு வைப்பதில் உள்ள கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கலாம் எனக் கோரியுள்ளார். 

ஏற்றுமதிக்கான ஒதுக்கீடு மொத்த உற்பத்தியில் 14.16 சதவிகிதமாக தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது. அதிலும், கரும்பு அரவை செய்யாத ஆலைகளுக்கும், போதிய கரும்பை இருப்பு வைத்திருக்காத ஆலைகளுக்கும் இந்த ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு கிலோ 19 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது நஷ்டத்தையே உண்டாக்கும். எனவே, இதிலிருந்தும் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com