தமிழ்நாடு
‘வேலை வேண்டி மனு கொடுத்தவருக்கு 2 மணி நேரத்தில் பணி ஆணை’ முதல்வர் பழனிசாமி ட்வீட்
‘வேலை வேண்டி மனு கொடுத்தவருக்கு 2 மணி நேரத்தில் பணி ஆணை’ முதல்வர் பழனிசாமி ட்வீட்
அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல்வர் சென்ற சாலையின் வழியே ஓரமாக நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வேலை வேண்டி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை வாங்கி பார்த்த முதல்வர் பரிசீலனை செய்வதாக சொல்லியிருந்தார்.
உடனடியாக அந்த பெண்ணிற்கு இரண்டு மணி நேரத்தில் அரசு வேலைக்கான பணி ஆணையை கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த பெண்ணிற்கு முதல்வர் பணி ஆணையை வழங்கினார்.
அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து முதல்வரின் செயலை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.