நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிச்சாமி

நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிச்சாமி

நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிச்சாமி
Published on

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளையிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் சட்டமன்ற தேர்தல் பரப்புரையை நாளை எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்க உள்ளேன்” என்று அறிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com