\
‘மக்களின் தேவைக்காக 500 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்படும்’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

‘மக்களின் தேவைக்காக 500 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்படும்’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

‘மக்களின் தேவைக்காக 500 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்படும்’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on

‘மக்களின் அவசர தேவைக்காக 500 ஆம்புலன்ஸ்கள் சுமார் 103 கோடி ரூபாயில் வாங்கப்படும்’ என மதுரையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க மதுரைக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தது “கொரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு தமிழகத்தில் இருப்பு உள்ளன. சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை  நடவடிக்கைகளால் கொரோனா குறைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 103 கோடி ரூபாய் செலவில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்ட உள்ளன” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com