15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கம் - முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் சங்கர், திருநெல்வேலி காவல் துணை ஆணையர் சரவணன், சேலம் காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர், சென்னை வேலைவாய்ப்பு மோசடி மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத், ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

இதேபோல், புலன்விசாரணை பணியில் மிகச்சிறப்பாக பணியாற்றிய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் நாகஜோதி, சென்னை க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன், சேலம் வடக்கு சரகம் காவல் உதவி ஆணையர் சரவணன், வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன், திருச்சி குற்றப்பிரிவு குற்றப்புலானய்வுத்துறை காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், திருச்சி மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் காவல் ஆய்வாளர் சித்ரா, சிவகங்கை மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம் காவல் ஆய்வாளர் நீலாதேவி, அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள், திருநெல்வேலி குற்றப்பிரிவு குற்றப்புலாய்வுத்துறை காவல் ஆய்வாளர் உலகராணி, திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com