முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் நிவாரணத் தொகை: முதலமைச்சர்

முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் நிவாரணத் தொகை: முதலமைச்சர்
முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் நிவாரணத் தொகை: முதலமைச்சர்

முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14,667 பேருக்கு இரண்டு தவணையாக தலா 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால் நலவாரியத்தில் பதிவு செய்யாத நபர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாக கூறி நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அதனால் முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை போன்றே நிவாரணைத் தொகை வழங்க முடிவு தமிழக அரசு செய்துள்ளது.

அதன்படி பதிவு பெறாத முடிதிருத்தும் தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேருராட்சியில் பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி, மாநகராட்சியில் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து 2000 ரூபாய் வழங்க உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com