\
முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
Published on

மக்களின் குறைகளை நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி குறிப்பிட்ட நாளில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. 

மேலும், ஒரு வார காலத்திற்குள் அந்த மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும் என்றும், அதன் பின் செப்டம்பரில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 

காலை 9.30 மணிக்கு வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காலை 11.00 மணிக்கு எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்ளும் முதல்வர், பிற்பகல் 2 மணியளவில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். இதேபோல் நாளை தலைவாசல், ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் அவர் மக்களை சந்திக்கவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com