உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்
உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமாணி பதவி விலகல் கடிதம் அளித்தார். இதன் காரணமாக 9-ஆம் தேதி தனது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி விசாரிக்கவில்லை.

இதனையடுத்து தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 10, 12 மற்றும் 13 தேதிகளிலும் தலைமை நீதிபதி அமர்வு செயல்படவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து 5-ஆவது நாளாக வரும் திங்கள்கிழமையும் தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் பட்டியலிடப்படவில்லை.

கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில் ரமாணியின் புகைப்படம் இடம்பெறாதது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. நீதிபதிகள் பட்டியலில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதியின் படம் தற்போது இல்லை. அவரது படத்தை தவிர மற்ற அனைத்து நீதிபதிகளின் படமும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com