89 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை

89 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை
89 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை

பிரதமரின் ராமேஸ்வரம் பயணத்தையொட்டி, இலங்கைச் சிறையில் உள்ள 89 தமிழக மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க இலங்கை தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். இந்த மீனவர்கள் அனைவரும் நாளை விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பவார்கள் எனக் கூறப்படுகிறது.

விடுவிக்கப்பட உள்ள 89 மீனவர்களும் மே மாதம் 1 முதல் ஜுலை 22 வரை கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முன்னதாக, கடந்த 21 ஆம் தேதி நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்கரை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 8 பேரையும், கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் காங்கேசன் துறைமுகக் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் 89 தமிழக மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக இலங்கையின் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com