தமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை

தமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை

தமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை
Published on

18 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியோடு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி உள்ளார்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தால் காலியாக இருக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது 18 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக விவரம் கேட்டறிந்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அக்டோபர் 24ம் தேதி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தரப்பினர் தெரிவித்ததால், அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் 18 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடிதம் மூலம் கேட்டிருந்தார். டிடிவி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளார்களா என அதில் வினவியிருந்தார். இதுகுறித்து சட்டப்பேரவை செயலரிடம் தகவல் பெற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டிடிவி தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்பதை கூறியுள்ளார்.

மேலும் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், 18 தொகுதிகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவது இதன் மூலம் தெரிந்தது. அதேவேளையில் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தீர்ப்பைப் பொருத்து அடுத்த முடிவு எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com