\
இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினரும் வருகின்றனர். 

பிற்பகலில் சென்னை வரும் அவர்கள் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, நாளை மறுநாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். 

தலைமை தேர்தல் அதிகாரி அரோராவின் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தற்போதை நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com