\
நெருங்கும் பேரவைத் தேர்தல்: தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

நெருங்கும் பேரவைத் தேர்தல்: தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

நெருங்கும் பேரவைத் தேர்தல்: தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
Published on

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர்.

காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர், 11 மணிக்கு சென்னையை வந்தடைகின்றனர். அதனைத்தொடர்ந்து அந்தக் குழு, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். வியாழன்று, தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழு ஆலோசனை நடத்துகிறது.

அதன் தொடர்ச்சியாக, அன்றைய தினமே புதுச்சேரி புறப்பட்டு அங்கு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னை வழியாக, இந்திய தலைமை தேர்தல் ஆணைய குழு கேரளா செல்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com