சிதம்பரம்: காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்

சிதம்பரம் அருகே மத நல்லினத்தை போற்றும் வகையில் காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்... அவர்களுக்கு சால்வை அணிவித்து இந்துக்கள் மரியாதை... இந்த நெகழ்ச்சி சம்பவம் குறித்து பார்ப்போம்...
குடமுழுக்கு விழாவுக்கு வந்த இஸ்லாமியர்கள்
குடமுழுக்கு விழாவுக்கு வந்த இஸ்லாமியர்கள்pt desk

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவை சிவாச்சாரியார்கள் மூன்று கால யாகசாலை பூஜை செய்து புனித நீரை கொண்டு விமானக் கலசத்தில் ஊற்றி நடத்தி வைத்தனர்.

குடமுழுக்கு விழாவுக்கு வந்த இஸ்லாமியர்கள்
குடமுழுக்கு விழாவுக்கு வந்த இஸ்லாமியர்கள்pt desk

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் காளியம்மன் திருக்கோவிலுக்கு தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து யாகம் நடைபெற்ற இடத்தில் ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைத்தனர்.

குடமுழுக்கு விழாவுக்கு வந்த இஸ்லாமியர்கள்
குளிர்பானம் / பழச்சாறு / காஃபி / டீ அதிகம் குடிப்பீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

அதனை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து புனித நீர் கலசத்தை வழங்கினர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com