சத்தீஸ்கர் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?

சத்தீஸ்கரில் தற்போதைய நிலவரம் என்ன, அங்கு முன்னிலையில் இருப்பது எந்தக் கட்சி என்பது குறித்து இந்த கட்டுரையில் அறிவோம்.
சத்தீஸ்கர் தேர்தல்
சத்தீஸ்கர் தேர்தல்ட்விட்டர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது 3 மணி நிலவரப்படி, பாஜக 53 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது, பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் தேர்தல் நிலவரம் குறித்து அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com