மருத்துவமனையில் மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழப்பு - சத்தீஸ்கரில் சோகம்

மருத்துவமனையில் மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழப்பு - சத்தீஸ்கரில் சோகம்
மருத்துவமனையில் மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் உயிரிழப்பு - சத்தீஸ்கரில் சோகம்

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத் துறை செயலாளருக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக அம்பிகாபூர் மருத்துவமனைக்கு நேரில் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தவற விடாதீர்: புத்துயிர் பெற்றதா 48,500 வருட பழமையான ஜாம்பி வைரஸ்? - எதிர்காலத்தில் என்னவாகும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com