ரூ. 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது சென்னை சேப்பாக்கம் மைதானம்

ரூ. 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது சென்னை சேப்பாக்கம் மைதானம்
ரூ. 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது சென்னை சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது.

ரூ.139 கோடி செலவில் சேப்பாக்கம் மைதானம் 62,000 சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் மைதானம் தயாராகிறது. அதில் நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை தமிழக அரசு விதித்திருக்கிறது.

மேலும் அங்கு மரங்களை வெட்ட அனுமதியில்லை எனவும், அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் எனவும் கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com