\
Chennai’s Data Centre Boom: 7-Fold Growth Expected by 2032
Data CentreReuters

டேட்டா சென்டரின் அடுத்த தலைநகர் சென்னை.. தொழில்நுட்ப வளர்ச்சியில் முந்தும் தமிழ்நாடு?

வாட்ஸ்அப் முதல் சாட்ஜிபிடி வரை.. டிஜிட்டல் உலகின் முதுகெலும்பாகத் திகழும் டேட்டா சென்டர் துறையில் சென்னை புதிய உச்சத்தைத் தொடத் தயாராகிறது. அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு வளர்ச்சியை எட்டும் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்துப் பார்க்கலாம்.
Published on: 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், சாட்ஜிபிடி என அனைத்திற்கும் பின்னால் மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்பு ஒன்று செயல்படுகிறது. அதுதான் டேட்டா சென்டர்கள். நாம் அனுப்பும் ஒரு புகைப்படம் முதல் செயற்கை நுண்ணறிவு வழங்கும் பதில்கள் வரை அனைத்தையும் சேமித்து, விரைவாகச் செயலாக்குவதில் டேட்டா சென்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய டேட்டா சென்டர் துறையில், இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, அடுத்தகட்டமாக மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Reuters
ReutersData Centre

அதன் ஒருபகுதியாக, சென்னையில் நடைபெற்ற இஷ்ரே (ISHRAE) டேட்டா சென்டர் மாநாட்டில், இத்துறையின் எதிர்கால வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது சென்னையில் 305 மெகாவாட் திறனில் டேட்டா சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திறன் 2032-ஆம் ஆண்டுக்குள் 2 புள்ளி 2 ஜிகாவாட்டாக, அதாவது சுமார் 7 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இத்துறை 100 மடங்கு வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி சென்னையோடு நின்றுவிடாமல், தூத்துக்குடி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. இதன் மூலம் ஐடி துறையினர் மட்டுமின்றி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இத்தகைய டேட்டா சென்டர்களுக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும் என்பதால், சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை டேட்டா சென்டர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

Chennai’s Data Centre Boom: 7-Fold Growth Expected by 2032
ஒரு மணி நேர வர்த்தகம்! தீபாவளி ஸ்பெஷல்! பணம் பெருகுமா? பங்குச் சந்தையில் என்ன நடக்கும்?