சுங்கத்துறை இணையத்தில் மோடிக்கு எதிரான வாசகம்: ஹேக்கர்கள் கைவரிசை

சுங்கத்துறை இணையத்தில் மோடிக்கு எதிரான வாசகம்: ஹேக்கர்கள் கைவரிசை

சுங்கத்துறை இணையத்தில் மோடிக்கு எதிரான வாசகம்: ஹேக்கர்கள் கைவரிசை
Published on

சுங்கத்துறையின் சென்னை மண்டல இணையதளத்தை ஹேக்கர்கள் எனப்படும் சைபர் கிரைம் நபர்கள் முடக்கியுள்ளனர்.

நூதன முறையில் பல துறைகளின் இணையதளத்தை, ஹேக்கர்கள் எனப்படும் சைபர் கிரைம் நபர்கள் முடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்கத்துறையில் சென்னை மண்டல இணையதளத்தை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். அத்துடன் இணையதளத்தின் முகப்பில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகத்தையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். 

அந்த வாசகத்தில், காஷ்மீர் விடுதலையே தங்களது இலக்கு என ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே இணையதளத்தை முடக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் காஷ்மீரில் இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த இணையதள ஹேக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்நாட்டு ஆதரவாளர்கள் என கருதப்படுகிறது. அத்துடன் முடங்கிய இணையதளத்தை மீட்கும் பணியில் அரசு தொழில்நுட்பத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com