“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
Published on

சென்னை வண்ணாரப்பேட்டையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளைஞர் மன்சூர். இவர் தனது வீட்டருகே உள்ள சிக்கன் பகோடா கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்றிரவு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர், காலை வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மன்சூர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அப்போது மன்சூர், தனது தாயாரின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போயினர்.

தகவலறிந்து வந்த போலீசார் மன்சூரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மன்சூர் இறப்பதற்கு முன், செல்போனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் “என்ன வாழ்க்கைடா இது., காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டேன் என்கிறாங்க, வாழ்க்கைக்கு குட்பை” எனப் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com