Egmore murder case
Egmore murder casept web

சென்னை: எழும்பூரில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை – மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நடந்ததால் பரபரப்பு

சென்னையில் இளைஞரை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
Published on

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (22) இவர் மீது புழல், செங்குன்றம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு சத்யாவை எழும்பூர் மாண்டியாத் சாலையில் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Death
DeathFile Photo

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com